நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கடப்பிதழ், விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

அபு தாபி :

துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கடப்பிதழ், விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜிட்டெக்ஸ்’ தொழில்நுட்பக் கண்காட்சியின்போது ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கும் நிறுவனமான இமாராடெக் இவ்விவரங்களை வெளியிட்டுள்ளது.

பயணி ஒருவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர் குறித்த தரவுகள் அனைத்தையும் தங்கள் தரப்புக் கொண்டிருக்கும் என்று இமாராடெக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் அகமது பகா தெரிவித்துள்ளார்.

பயண ஆயத்த முகப்பில் (check-in counter) பயணி படமெடுக்கப்படுவார். பின், அவரது முக அடையாளங்கள் கண்டறியப்படும். அவரது விரிவான பயணத்திட்டம் வழங்கப்பட்டு, அவர் தமது பயண உடைமைகளை ஒப்படைக்க வழிவகை செய்யப்படும்.

தொடர்ந்து, பயணி ஒருவரது பயணம் முழுக்க அவருடைய புகைப்படம் பயன்படுத்தப்படும். குடிநுழைவுச் சோதனைக்கு முகப்பிற்குச் செல்லத் தேவையிராது.

மாறாக, விவேக நுழைவாயிலுக்கு அவர் செல்லலாம். அங்கும் அவர் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை.

ஏதேனும் பொருள் வாங்குவதாக இருந்தால், அங்கிருந்து நேராக வரியில்லாக் கடைகளுக்குச் செல்லலாம்.

அங்கும் சரி, பயண நுழைவாயிலிலும் (Boarding gate) அவர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டிய அவசியமில்லை.

பாதுகாப்புச் சோதனை முடிந்துவிட்டால், துபாய் விமான நிலையத்திலிருந்து எளிதாக, சுமுகமாகப் பயணம் செய்யலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset