நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா தாக்குதல் வெறும் ஆரம்பம் தான்; இனி நடப்பதைப் பாருங்கள்: இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ் :

இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் இன்று 9ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

அவர் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில், ஹமாஸ் தாக்குதலில் 1300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதற்கு முதலடிதான் காசா மீதான தாக்குதல். 

இதுதொடக்கம் தான் இன்னும் தரைவழித் தாக்குதல் இருக்கிறது. காசா எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான வீரர்கள் விரைந்துள்ளனர். இனி என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. 

ஆனால் இதுதான் தொடக்கம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். இஸ்ரேல் மீதான தாக்குதலை நாங்கள் மன்னிக்கப் போவதில்லை. யூத மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை இந்த உலகம் மறக்கவிடமாட்டேன். 

எதிரிகளை எல்லையில்லா சக்தி கொண்டு எதிர்கொள்வோம் என்று
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset