நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை

முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியமான பிரச்னை அதன் பாதுகாப்போ, அதன் வளர்ச்சியும் முன்னேற்றமுமோ இல்லை. ஒருபோதும் இல்லை. 

இந்த உம்மத்தின் உண்மையான பிரச்னை இன்று கோடிக்கணக்கில் முஸ்லிம்கள் இருந்தும், உயிரோடு வாழ்ந்துகொண்டிருந்தும், அவர்களுக்குள் முஸ்லிம் என்கிற மணமோ, குணமோ எஞ்சியிருக்கவில்லை என்பதுதான். 

முஸ்லிம் என்கிற மணமும் குணமும் என்று நான் சொல்வது வெறுமனே தொழுகையும் நோன்பும் தொப்பியும் தாடியும் மட்டுமே அல்ல. அதற்கு மாறாக எந்த நோக்கத்திற்காக, எந்த இலட்சியப் பணிக்காக, எந்தப் பொறுப்புக்காக, எந்த தகுதியோடு இந்த உம்மத் எழுப்பப்பட்டதோ அந்த இலட்சியத்தையும் குறிக்கோளையும்தான் நான் முஸ்லிம்களின் குணமாக, மணமாக சொல்கின்றேன். 

மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். 

மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு ‘முஸ்லிம்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு இதே பெயர்தான்!) தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! 
(திருக்குர்ஆன் அத்தியாயம் 22 அல்ஹஜ் 78)

அல்லாஹ் எந்ப் பணிக்காக இந்த உம்மத்தைத் தேர்ந்தெடுத்துள்ளானோ அந்த பணி எஞ்சியிருக்காமல் போனால் கோடிக்கணக்கில் மனிதர்களின் குவியல் இருந்தாலும் அது அர்த்தமற்றதே. இன்று இந்த மண்ணில் முஸ்லிம்கள் நிச்சயமாகக் கோடிக்கணக்கில் இருக்கின்றார்கள். ஆனால் இஸ்லாத்தின் உண்மையான நடத்தையையும் பங்களிப்பையும் பங்கேற்பையும் அவர்கள் முற்றாக மறந்துவிட்டிருக்கின்றார்கள்; தொலைத்துவிட்டிருக்கின்றார்கள். இது தான் இன்று முஸ்லிம்கள் சந்தித்து நிற்கும் மிகப் பெரும் பிரச்னையாகும். மிகப் பெரும் நெருக்கடியாகும். 

உலக வரைபடத்தில் முஸ்லிம்களின் நிலையும் அடையாளமும் கூட பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் நிலையையும் அடையாளத்தையும் ஒத்ததாக ஆகிவிட்டிருக்கின்றது.

முஸ்லிம்களின் ஆர்வங்களின் மையமும் முஸ்லிம்களின் போராட்டங்களின் இலக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்போடும், முஸ்லிம்களின் உரிமைகளின் பாதுகாப்போடும் முஸ்லிம்களின் நலன்களின் பாதுகாப்போடும் முடங்கி விட்டிருக்கின்றன. இன்று முஸ்லிம்களின் தலையாய பிரச்னைகளாய் இவை தாம் பேருருவம் எடுத்திருக்கின்றன.

மற்ற சமூகத்தாரும் முஸ்லிம்களை அந்த நிறத்தில் தான், அந்தக் குணத்தைக் கொண்டவர்களாகத்தான் பார்க்கின்றார்கள். புதுமையான, புத்தெழுச்சியைத் தரக்கூடிய, புத்துணர்வை மீட்டெடுக்கக்கூடிய கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் மனித குலத்துடன் உரையாடுகின்ற சமூகமாக எவரும் முஸ்லிம்களைப் பார்ப்பதில்லை.

வரலாற்றின் தீர்மானமான நேரத்தில் - திருப்புமுனையாக இருக்கின்ற வேளையில் - இந்த உம்மத் தன்னுடைய அசல் அடையாளத்தைத் தொலைத்து நிற்பதுதான் மிகப் பெரும் துயரமும் வேதனையுமாகும். 

முஸ்லிம் எந்தவொரு குறிப்பிட்ட இனத்தின் பெயரோ, குறிப்பிட்ட நிறத்தின் பெயரோ, குறிப்பிட்ட தோற்றத்தையோ, வடிவத்தையோ கொண்டவர்களின் பெயரோ குறிப்பிட்ட சமூகக் குழுவினைச் சுட்டுகின்ற பெயரோ அல்லர். 

முஸ்லிம்கள் கைரே உம்மத் - சிறந்த சமுதாயத்தார் ஆவர். அதாவது அவர்கள் ஒரு போதும் தம்முடைய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்க வேண்டியவர்கள் அல்லர். அவர்கள் உக்ரிஜத் லின்னாஸ் - மனித குலம் முழுவதுக்காகவும் ஒட்டுமொத்த மனிதர்களின் நலத்துக்காகவும் எழுப்பப்பட்ட இலட்சியக் குழுவினர் ஆவர். மனிதகுலத்துக்கு சான்று பகர்பவர்கள் ஆவர். ஒட்டுமொத்த மனிதர்கள் மீது சத்தியத்துக்கு சான்று வழங்க வேண்டியவர்கள் ஆவர். 

அவர்கள் உம்மத்தே வஸ்த் - சமநிலையான சமுதாயத்தார் ஆவர்.

மக்களை எல்லா விதமான சமநிலை தவறிய போக்குகளிலிருந்தும் நிதானம் தவறுகின்ற நடத்தைகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்குரியதாகும். 

அவர்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றுகின்றவர்கள் ஆவர். அவர்கள் நபி இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருந்தவர்களாய் நபி இப்ராஹீமின் உலகளாவிய, அனைத்தையும் தழுவிய தொலைநோக்குடனும் தெளிவான இலக்கோடும் மும்முரமாக இயங்க வேண்டியவர்கள் ஆவர். அவர்கள் நீதஞ் செறிந்த சமுதாயத்தார் ஆவர். உலகத்தாருக்கு - ஒவ்வொரு மனிதருக்கும் நீதியையும் நியாயத்தையும் வழங்குவது அவர்கள் மீதான மகத்தான பொறுப்பாகும். 

வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் அல்லாஹ் இந்த உம்மத்தின் மடியில் வாய்ப்புகள் என்கிற மிகப் பெரும் கருவூலத்தைக் கொட்டியிருக்கின்றான். அந்தக் கருவூலத்தைப் பயன்படுத்துவது எப்போது சாத்தியமாகும்? 

இந்த உம்மத் தனக்கான அடிப்படையான, உண்மையான, முதன்மையான இலட்சியத்தின் மீது முழு மனஓர்மையோடு தன்னுடைய கவனத்தையும் அக்கறையையும் குவித்தால் தான் அது சாத்தியமாகும். 

எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக! 
(திருக்குர்ஆன் அத்தியாயம் 30 அர்ரூம் 43)

இந்த வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்ற ஃபோகஸ்  - கவனத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் உழைப்பையும் முயற்சியையும் எல்லாவற்றையும் குவித்து வைத்திருத்தல் - தான் இன்று நமக்குத் தேவை. 

என் இனிய தோழர்களே!  இந்த மன ஓர்மை இன்றி, இந்த ஃபோகஸ் இன்றி, இந்த கவனமும் அக்கறையும் ஈடுபாடும் இல்லாமல் இந்த உம்மத்தைக் கட்டி எழுப்பவே இயலாது. 

அல்லாமா இக்பால் சொன்னார்:

அப்னி மில்லத் பர் கியாஸ் அக்வாமே மக்ரிப் சே நா கர்
காஸ் ஹே தர்கீப் மே கவ்மே ரசூலே ஹாஷிமி

உன்னுடைய சமுதாயத்தை மற்ற மேற்கத்திய சமுதாயங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதே! ஹாஷிமி குலத்து நபியின் சமுதாயத்தை வார்த்தெடுத்த மூலப் பொருள்களே முற்றிலும் வேறு! 

- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி

தொடர்புடைய செய்திகள்

+ - reset