செய்திகள் மலேசியா
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் சாதனைப் படைக்க கைகொடுங்கள்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
பத்துமலை :
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நடனப் போட்டியில் பங்கேற்க நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர்.
அப்பள்ளி மாணவர்களுக்கு சமுதாய மக்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
அனைத்துலக நடனப் போட்டி இந்தியாவில் குவாலியர் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி வரும் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மலேசியாவை பிரதிநிதித்து பத்துமலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான மாணவர்களுடன் 4 ஆசிரியர்களும் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
கல்வியமைச்சின் முழு அங்கீகாரத்துடன் இந்த நடனக் குழுவுனர் அங்கு செல்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு செல்வதற்கு மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
பள்ளி பெற்றோர் ஆயிரம் சங்கம் பொது மக்களிடம் பொதுமக்களிடம் நிதி உதவியை கேட்கும் வீடியோவை நம்பிக்கை செய்திகள் அகப்பக்கத்தில் பார்த்தேன்.
இதன் அடிப்படையில் சக்தி அறவாரியத்தின் கீழ் அம்மாணவர்களுக்கு கனிசமான நிதி வழங்கப்பட்டது.
இதேபோன்று அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அம்மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இம்மாணவர்கள் இந்தியா சென்று வர செலவாகும் தொகையில் இதுவரை 60 ஆயிரம் ரிங்கிட்டை சேகரித்து விட்டோம். இன்னும் 90 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுகிறது.
ஆகவே பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நல்லுள்ளங்களின் ஆதரவை எதிர்நோக்குகிறது என்று அதன் தலைவர் ஹரிராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
