நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவிற்கு எதிரான அடக்குமுறை; இஸ்ரேஸ் அனைத்துலக சட்டவிதிகளை மீறியுள்ளது 

புருசெல்ஸ்: 

காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் பல்வேறான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அது அனைத்துலக சட்டவிதிகளை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கடுமையாக சாடியுள்ளார். 

ஒரு நாட்டின் உரிமையானது முறையாக சட்டம் மற்றும் சீரான அணுகுமுறையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அடக்குமுறையின் கீழ் அதனை மேற்கொள்வது ஏற்புடையதாக அமையாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜொசெப் பொர்ரெல் தெரிவித்தார். 

மின்சாரம், நீர், உணவு விநியோகம் ஆகிய அடிப்படை விவகாரங்களில் இஸ்ரேல் தங்களது ஆதிகத்தை செலுத்தியதோடு இதற்கான தடைகளை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தி வருகிறது. 

பாலஸ்தீன நாட்டு மக்களை இப்படி வஞ்சிப்பது நியாயமற்றது. அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset