நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவுக்கு உணவு, குடிநீர் முடக்கம்: ஐ.நா. பொதுச் செயலர் கவலை

ஜெனீவா:

காஸா முனையை முழுமையாக முற்றுகையிட்டு உணவு, குடிநீரை முடக்க உள்ள இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்  கவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், காஸாவின் மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் அதாவது 1,37,000 பேர் ஐ.நா. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காஸாவை  முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு முன்பும் காஸாவில் மனிதநேயம் மிகவும் மோசமாக இருந்தது. இஸ்ரேலின் இந்த முடிவு நிலைமையை மிகவும் மோசமாக்கும் என கவலை தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset