நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிரியா ராணுவ அகாதெமியில் டிரோன் தாக்குதல்: 89 பேர் பலி

டமாஸ்கஸ்:

சிரியாவிலுள்ள ராணுவ அகாதெமியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 89பேர்  உயிரிழந்தனர். 277 பேர் காயமடைந்தனர்.

பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடந்து முடிந்த சில நிமிஷங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

12 ஆண்டு காலமாக உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் சிரியாவில் ட்ரோனை ஆயுதமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று சிரியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த மோசமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்தில் கிளர்ச்சிப் படையினரின் வசம் எஞ்சியிருக்கும் பகுதியில் சிரியா விமானங்கள்  முழுவதும் குண்டுவீச்சி தாக்கின.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset