நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யார் இந்த நர்கிஸ் முஹம்மதி?: சிறையில் இருந்து அமைதிக்கான நோபல் வென்றது எப்படி?

ஓஸ்லோ:

ஈரானில் பெண்களின் உரிமைக்காக போராடி  சிறையில் கைதியாக இருக்கும் மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெறுகிறார்.

20 ஆண்டுகளாக தொடரும் அவரது போராட்டத்தில், 13 முறை சிறைவாசம், 31 ஆண்டுகள் தண்டனைப் பெற்றும்  பெண் உரிமைக்கான போராட்டத்தை சிறையில் இருந்தபடியே தொடர்கிறார்.

134 முறை கசையடியும் பெற்றவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19வது பெண் நர்கிஸ் முஹம்மதி ஆவார். நோபல் வெல்லும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2வது பெண்ணும் இவராவார்.

2003ல் ஈரானைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஷிரின் எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார்.

122 ஆண்டுகால வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5வது முறையாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset