நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2 ரஷ்ய தூதர்கள் வெளியேற்றம்

வாஷிங்டன் :

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா - அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷ்ய அரசு வெளியேற்றியது.

இந்த நிலையில் ரஷ்யாவின் செயலுக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்த 2 ரஷ்ய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.

தங்கள் தூதரக அதிகாரிகளை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதைப் பொறுத்து கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.

அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset