நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

கூகுளுக்குப் பதிலாக மாற்றுத் தளத்தை நாடிய ஆப்பிள் நிறுவனம்

சான் ஃபிரான்சிஸ்கோ: 

ஆப்பிள் நிறுவனம், அல்ஃபபெட் நிறுவனத்தின் பிரபல கூகுள் இணையத் தேடல் தளத்துக்குப் பதிலாக டக்டக்கோ தளத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. 

ஆப்பிள் பயன்படுத்தும் சஃபாரி மென்பொருளில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த (பிரைவேட் மோட்) டக்டக்கோவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக இந்த விவகாரத்தை அறிந்த சிலர் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைத் தொடர்பிலான விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூகுளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா நீதிமன்ற வழக்கில் டக்டக்கோ தலைமை நிர்வாக அதிகாரி கேப்ரியல் வென்பர்க், ஆப்பிள் அதிகாரி ஜான் ஜியானாண்ட்ரயா ஆகியோரின் வாக்குமூலங்களை வெளியிடப்போவதாக புதன்கிழமையன்று நீதிபதி தெரிவித்தார்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset