நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோவிட்-19 தடுப்பூசி கண்டுப்பிடிக்க உதவிய இரு மருத்துவர்களுக்கு நோபல் பரிசு 

சுவீடன் :

கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம் சுவீடனில் அமைந்துள்ளது. 

இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களைக் கொண்ட நோபல் தேர்வுக் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் வகையில் கண்டுப்பிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு வழங்க தேவு செய்கிறது. 

அவ்வகையில் இவ்வருடம், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, Katalin Kariko மற்றும் Drew Weissman ஆகிய இருவருக்கு வழங்கப்படவுள்ளது. 

மேலும், மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினைக் கண்டறிவதற்கு இவ்விருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் உதவியாக இருந்தது.

இதனைக் கொண்டு, கோவிட்-19 நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெருமளவு தயாரிக்க சுலபமாக இருந்தது. 

உயிர்வேதியியல் துறையைச் சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான Katalin Kariko அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராககப் பணிப்புரியும் நிலையில் 64 வயதான Drew Weissman மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநராகவுள்ளார். 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset