நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சாலை என ஆற்றைத் தவறாக வழிகாட்டிய  கூகுள் மேப்ஸ் : நீரில் மூழ்கி மருத்துவர்கள் பலி

கொச்சி: 

கேரள மருத்துவர்கள் இருவர், ஜிபிஎஸ் கருவியின் உதவியோடு சாலையில் பயணித்தபோது, ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தண்ணீர் நிறைந்த ஆற்றை, நேராக செல்லுங்கள்; சாலை என ஜிபிஎஸ் தவறாகக் கூறியதால், வழி தெரியாத மருத்துவர்கள் இருவரும், ஆற்றுக்குள் காருடன் கவிழ்ந்து மூழ்கி பலியாகியுள்ளனர்.

வழிதெரியாத தடத்தில் ஜிபிஎஸ் ஆன் செய்துவிட்டு கூகுள் மேப்பில் வழி பார்த்துக்கொண்டே செல்லும்போது, சாலையே இல்லாத ஓரிடத்தில் சென்று நிறுத்திவிட்டு நேராக செல்லுங்கள் என்று கூகுள் மேப் சொல்லும் போது திரு திருவென முழித்திருக்கும் அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கலாம்.

ஆனால், இங்கே அது ஒரு சம்பவமாக மாறிவிட்டிருக்கிறது. டாக்டர் அத்வைத் (29), தனது நண்பர் மருத்துவர் அஜ்மல் ஆசிஃப் (29) மற்றும் சில நண்பர்களுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு காரை ஓட்டிச்சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பயங்கர இருட்டு, கொட்டும் மழையில், வழி தெரியாமல் அத்வைத் காரை ஓட்டிச் செல்ல, ஜிபிஎஸ் உதவியோடு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கூகுள் மேப் நேராக செல்லுங்கள் என வழி காட்ட, அது சாலையாக அல்லாமல் ஓடும் ஆறாக இருந்துள்ளது.

Car plunges into river in Ernakulam after losing control killing 2 doctors,  injuring 3 others, ernakulam, accidents, heavy rain kerala, drowning  deaths, craft hospital, google map accidents, koch

 அதற்குள் கார் கவிழ்ந்ததில், முன்னால் அமர்ந்திருந்த இருவரும் பலியாகினர். மற்ற மூன்று நண்பர்களும் எப்படியே தப்பித்து வெளியேறியுள்ளனர்.

அத்வைத் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற போது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த டாக்டர் காஸிக் தப்சீர் கூறுகையில், நாங்கள் வழி தெரியாமல் ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்தோம். நான் காரை ஓட்டவில்லை. அதனால், துல்லியமாக என்ன நடந்தது என்பதை என்னால் கூற முடியவில்லை. ஜிபிஎஸ் தவறாக ஆற்றை சாலை என்று கூறியதா? அல்லது தவறாக புரிந்துகொண்டார்களா என்பது தெரியவில்லை என்றார்.

 ஜிபிஎஸ் கருவியை பின்பற்றி வாகனத்தை ஓட்டும்போது, பொதுவாகவே நள்ளிரவு மற்றும் மழைக்காலங்களில் போக்குவரத்துக் குறைந்த சாலைகளை தேர்வு செய்யும்போது இவ்வாறு நேரிடலாம் என்றும், எந்த வாகனத்தில் பயணிக்கிறோம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset