நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் வன்முறைக்கு பாஜக காரணம் என மக்கள் கோபம்

இம்பால்:

மணிப்பூரில் 4 மாதங்களாக வன்முறைக்கு மாநில பாஜக அரசே தான் காரணம் என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மாநில பாஜக கடிதம் எழுதியுள்ளது.

மாநில பாஜக தலைவர் சாரதா தேவி, துணைத் தலைவர் சிதானந்தா சிங் மற்றும் 6 நிர்வாகிகள் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், மணிப்பூர் மக்களின் கோபமும், போராட்டங்களும் தற்போது மாநில அரசுக்கு எதிராக திரும்பி வருகிறது.

இந்த நீண்ட பாதிப்புக்கு, நிலைமையை சரிவர கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசே காரணம் என மக்கள் தற்போது குற்றச்சாட்டி வருகின்றனர்.

வன்முறைக்கு பயந்து புலம்பெயர்ந்த மக்களை, விரைந்து அவர்களின் சொந்த இடங்களில் குடியேறச் செய்ய வேண்டும்.

வன்முறையில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உறுதியளித்தபடி இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து இனமோதல் நீடித்து வருகிறது. இதுவரையில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset