நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போலி எஸ்எம்எஸ்ஸுக்கு பயந்து பள்ளி மாணவர் தற்கொலை

கோழிக்கோடு:

கேரளத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பெயரில் வந்த போலி எஸ்எம்எஸ்ஸுக்கு பயந்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோழிக்கோடு நகரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஆதிநாத் கடந்த புதன்கிழமை மாலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணையில், மாணவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில், அரசு தடை செய்த இணையதளத்தில் திரைப்படங்களை பார்த்ததாக தன்மீது பொய்யாக குற்றம்சாட்டி குறுஞ்செய்தி வந்ததாகவும், ரூ.30,000 உடனடியாக செலுத்தாவிட்டால், சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவர் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து, மாணவரின் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை காவல் துறையினர் சோதித்தனர். அதில் மாணவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset