நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: 4 நாள்களில் மீண்டும் இன்டர்நெட் துண்டிப்பு

இம்பால்: 

மணிப்பூரில் காணாமல்போன  மாணவன், மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்டது இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் தெரியவந்ததையடுத்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது.

இதனால் தொடங்கப்பட்ட 4 நாள்களில் மீண்டும் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது.

ஃபிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் ஜூலை 6ஆம் தேதி காணாமல் போயினர். இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது.

ஆயுதமேந்திய கும்பலிடம் அவர்கள் பிணைக்கைதியாக இருக்கும் படமும், பின்னர் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர், மாணவியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் அங்கு பெரும் போராட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை விசாரிக்க தில்லியில் இருந்து சிபிஐ சிறப்பு படையினர் தனி விமானம் மூலம் இம்பால் வந்தடைந்தனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் முலம் நீடித்து வரும் இனமோதலில் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset