நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இஸ்கான் அமைப்பு மாடுகளை கசாப் கடைகளுக்கு அனுப்புகிறது: மேனகா காந்தி

புது டெல்லி: 

கசாப்பு கடைக்காரர்களுக்கு பசுக்களை விற்பனை செய்கிறது என இஸ்கான் அமைப்பு மீது பாஜக  எம்பி மேனகா காந்தி கூறினார்.

இஸ்கான்' அமைப்பு மாட்டுத் தொழுவங்களை நிறுவுகிறது. இதற்காக அந்த அமைப்பு அரசிடம் இருந்து பெரிய அளவில் நிலங்களை பெறுகிறது.

தன்னிடம் உள்ள அனைத்துப் பசுக்களையும் கசாப்பு கடைக்காரர்களிடம் இஸ்கான்' விற்பனை செய்கிறது. அந்த அமைப்பு விற்பனை செய்யும் அளவுக்கு வேறு எவரும் பசுக்களை விற்பனை செய்வதில்லை.

அண்மையில் ஆந்திரத்தின் அனந்தபூர் பகுதியில் உள்ள அந்த அமைப்பின் மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றேன்.

அங்கு ஆரோக்கியமான ஒரு பசுவைக்கூட காண முடியவில்லை. அந்தத் தொழுவத்தில் கன்றுகளே இல்லை. கன்றுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதே அதற்கு அர்த்தம் என்று மேனகா காந்தி கூறினார்.

மேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு "இஸ்கான்' அமைப்பு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 60க்கும் அதிகமான மாட்டுத் தொழுவங்களைப் பராமரித்து வரும் இஸ்கான் நூற்றுக்கணக்கான பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset