நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அக்டோபர் மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க வாய்ப்பு

புதுடில்லி :

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

சர்க்கரைப் பருவம் ஒரு வருடத்தின் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைகிறது.

2021-22ல் சாதனையாக 11 மில்லியன் டன்கள் சர்க்கரையை விற்ற பிறகு, 2022-23 ஆம் ஆண்டில், உள்நாட்டுச் சந்தைகளில் விநியோகத்தை உறுதி செய்யவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் ஏற்றுமதியின் அளவை இந்தியா கட்டுப்படுத்தியது.

2022-23 சர்க்கரை ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் சர்க்கரை ஏற்றுமதியை 6 மெட்ரிக் டன்னாகக் கட்டுப்படுத்தியது. இந்த ஒதுக்கீடு கூட விலைவாசி உயர்வால் அகற்றப்படுகிறது. 

உள்நாட்டு விலைகளை குறைவாக வைத்திருப்பதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset