
செய்திகள் சிந்தனைகள்
மூன்றாம் பெருநாள் முத்திரை நபி பிறந்தநாள் வாழ்த்துகள் பாசனமாகட்டும் வசந்தங்கள் சாசனமாகட்டும்: கவியருவி அப்துல் காதர்
நகலெடுக்க முடியா நாயகன் நிழல் ஒளியாகும் - நபி
முகிலெடுத்த மழைவானும் நபியருளில் ஒரு துளியாகும்
திகிலெடுத்த மறுமைத் தீர்ப்புநாளில் - ஓரிறைத்
தீன்நெறியே தீநரகின் முடிவாகும்! - கஸ்தூரிவாச
அகிலெடுத்த மேனியிலே அரசரவர் ஆயுளிலே
அணிந்த கிழிசலில்லா ஆடைச்சவக் கோடியாகும் - அவர்கால்
துகளெடுத்து அஞ்சனச் சுருமா தீட்ட வேண்டும்
துஆவிரல் மினாரக்கள் கலிமா மொழிந்து காட்ட வேண்டும்!
சொர்க்கம் நரகம் இரண்டும் ஒருசேரத்
தோன்றல்நாள் வாழ்த்துச் சொல்லிடும் பிறந்தநாள்
சொர்க்கத் தனிமைத் துயர்நபி தோற்றத்தால் மாறியது
துயர்நரகம் சுமை குறந்தது என்று மகிழ்ந்தது
வர்க்கபேதம் நிறபேதம் வர்ணாசிரம அடுக்குபேதம்
வகுப்புவாதம் தீர்த்தநாள் வனிதையர் உரிமை சேர்த்தநாள்
சர்க்கார்கள் பேரனவாத சாராயத்தால் ஓட வேண்டாம்
சகோதரத்துவ மாலைத் தொடுக்கப் பெருமானார் இழைசேர்ப்போம்!
- கவியருவி அப்துல் காதர்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am