நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காலிஸ்தான் தலைவரின் சொத்துகள் முடக்கம்

புது டெல்லி:

கனடாவில் உள்ள ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்று கருத்து கூறிய காலிஸ்தான் தலைவரின் குருபாத்வந்த் சிங் பன்னுவுக்கு பஞ்சாபில் உள்ள  சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முடக்கியது.  

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இரு நபர்கள் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர். நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாட்டு உறவுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், ஹிந்துக்களுக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குருபாத்வந்த் சிங் பன்னு மிரட்டல்களை விடுத்து வந்தார்.

US-based Khalistani terrorist's properties, agricultural land seized in  Punjab - India Today

இந்நிலையில், அமிருதசரஸில் பன்னுவின் 5.7 ஏக்கர் விவசாய நிலம், வீடு ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை முடக்கினர்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரின் சொத்துகளை முடக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset