நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது

புதுடெல்லி:

பஹல்காம் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவத்தினர் பதிலடி கொடுத்த நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 

 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்த ராணுவ மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இந்திய இராணுவ வீரர்கள் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் மே 31-ஆம் தேதி வரை பயணிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை, இந்தியப் பாதுகாப்புப் படையினர் ரத்து செய்தால், 100 விழுக்காட்டு பணம் திரும்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரையில் எந்தவிதக் கட்டணமுமின்றி ஒருமுறை பயண நேரத்தை மாற்றியமைக்கும் சலுகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விடுமுறையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்த ராணுவ மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset