
செய்திகள் விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி : சீனாவில் இன்று தொடக்கம்
ஹாங்சோவ் :
45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951ஆம் ஆண்டு டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.
இந்த நிலையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19ஆவது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது இது 3ஆவது முறையாகும். ஏற்கனவே 1990, 2010ஆம் ஆண்டுகளில் அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.
இதில் நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பூப்பந்து, கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தெக்குவாண்டோ உள்பட மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 12,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் அரங்கில் இன்று மாலை ஆரம்பமாகிறது.
தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பல நாட்டு தலைவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am