
செய்திகள் வணிகம்
மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது
கோலாலம்பூர் :
அமெரிக்க கூட்டரசு ரிசர்வ் (Fed) வட்டி விகித உயர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் சற்று குறைந்தே வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில்,அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 4.6840/6880 ஆக இருந்து 4.6890/6935 ஆக குறைந்தது.
நேற்றிரவு, அமெரிக்க கூட்டரசு ரிசர்வ் விகிதங்களை 5.25 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்தது.
இருப்பினும், பணவீக்கத்தைக் குறைக்க தேவைப்பட்டால், விகிதங்களை உயர்த்தத் தயாராக இருப்பதாக கூட்டரசு ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்தார்.
கூட்டரசு ஓபன் மார்க்கெட் கமிட்டி வட்டி விகிதங்களை பராமரித்தாலும், பவலின் அறிக்கை வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தது. ஏனெனில் அவர்கள் பணவீக்கத்தை இரண்டு சதவீத இலக்கிற்குக் குறைக்க உறுதி பூண்டுள்ளனர் என்று முவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித்துறை தலைவர் அப்நிசாம் அப்துல் ரஷிட் கூறினார்.
ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு RM4.46 ஆகும்.
இதற்கிடையில், முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக உள்ளூர் நாணயம் 3.1653/1682 இலிருந்து 3.1595/1627 ஆக உயர்ந்தது.
மேலும் யூரோவிற்கு எதிராக 4.9853/9901 ஆக இருந்தது. இது 5.0114/0157 இல் இருந்து 5.700 லிருந்து நேற்று வலுவடைந்தது.
மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.4348/4382 இலிருந்து 3.4281/4317 ஆக உயர்ந்தது.
தாய் பாட்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 12.9891/13.0056 இலிருந்து 12.9120/9298 ஆக வலுவடைந்தது.
இருப்பினும், புதனன்று 304.5/304.9 இலிருந்து இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 304.8/305.2 ஆக குறைந்துள்ளது.
நேற்று 8.24/8.26 இல் பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக மாறாமல் இருந்தது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி 1 வெள்ளி மலேசிய ரிங்கிட் இந்திய ரூபாய் 17.71-க்கு விற்பனையாகின்றது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm