நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன். இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

விசாரணைக்கு ஏதுவாக அமையும் வகையில் ஈஸ்வரனின் எம்.பி. பதவியை பிரதமர் லீ இடைநீக்கம் செய்தார். இதனால் அவரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஈஸ்வரனின் எம்.பி பதவியை முழுவதுமாக ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் எதிர்க்கட்சியினர் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரினர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் தோல்வி அடைந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset