நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

H1B VISA வில் புதிய முறை: விவேக் ராமஸ்வாமி உறுதி

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு லாட்டரி முறையில் தேர்வு செய்து வழங்கப்படும் H1B VISA முறையை மாற்றி திறன் அடிப்படையில் வழங்குவேன் என்று  குடியரசுக் கட்சியின் போட்டியாளர் விவேக் ராமஸ்வாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு H1B VISAவை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்தியா, சீன நாட்டினர்தான் இதனால் பெரும் பலனடைந்து வருகின்றனர்.

இந்த முறைக்கு குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் ராமஸ்வாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், லாட்டரி முறையைப் போன்றே H1B VISA நடைமுறை உள்ளது. அந்த நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக, திறமையை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் தேவைக்கு ஏற்ப திறன்மிக்க வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நுழைவுஇசைவு வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset