நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு நேரடிப் போட்டி :  துணைத் தலைவரானார் சிவாலெனின் 

ஈப்போ : 
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்திற்கான வேட்புமனு தாக்கல் சங்கத்தின் பணிமனையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

தேர்தல் அதிகாரியாக பிரபல வழக்கறிஞர் மதியழகனும் அவருக்கு துணையாக தமிழரசனும் இருந்து தேர்தல் வேட்புமனு நடவடிக்கையினை சிறப்பாக மேற்கொண்டனர்.

நடப்பு தலைவர் முனைவர் மோகன் குமார் மீண்டும் போட்டியிடாமல் விலகிக் கொண்டதால் நடப்பு  துணைத்தலைவர் முல்லைச் செல்வன் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அருள் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

அதேவேளையில் துணைத்தலைவருக்கு எழுத்தாளர் சிவாலெனின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடப்பு செயலாளர் முனியாண்டி மற்றும் நடப்பு பொருளாளர் சபா கணேசு ஆகியோரும் போட்டியின்றி தங்களின் பதவிகளை தற்காத்து கொண்டனர்.

மேலும் துணைச் செயலாளராக  .இராதை சுப்பையா போட்டியுன்றி  தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சங்கத்தின் பத்து செயலவை உறுப்பினர்களுக்கான போட்டியில் 13 பேர் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பதையும் மதியழகன் வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் அவற்றை முறையாக சரிபார்த்த பின்னர் தெரிவித்தார்.

மேலும்,செயலவைக்கு 13 பேர் போட்டியிடுவதாக அறிவித்து முறையே அவர்களின் பெயர்களையும் அறிவித்தார்.

செயலவைக்கு இம்முறை சுப கதிரவன், குழந்தைமேரி, தனலெட்சுமி, ருக்குமணி, பழனியம்மாள், கணேஸ்ராவ், வீரப்பன்,  கவிஞர் முத்துப்பாண்டி, சித. நாராயணன், சுப்பிரமணியம், சரவணன், சண்முகம், இளவரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset