நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிஎம் கேர்ஸ் நிதியைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு உதவுங்கள்: உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: 

கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக வழங்கப்பட்டு வரும் உதவிகளை போல் ஆதரவற்ற சிறார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய  அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜியிடம் நீதிபதிகள் கூறுகையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறார்களுக்கு மத்திய அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மற்ற காரணங்களால்கூட சிறார்கள் ஆதரவற்ற நிலையை அடையலாம். குறிப்பிட்ட சூழல் அடிப்படையில் ஆதரவற்றவர்களாக மாறிய சிறார்களுக்கு மட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவது முறையாக இருக்காது.

அத்தகைய திட்டங்களை அனைத்து ஆதரவற்ற சிறார்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset