
செய்திகள் விளையாட்டு
8-ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா
கொழும்பு :
16-ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா அரங்கில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ஆட்டத்தின் 4-ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ், இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும், தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் முகமது சிராஜ் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் (16 பந்துகள்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமிந்தா வாஸ்வுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த நிலையில் 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷான் 23 ரன்களும் சுப்மன் கில் 27 ரன்களும் எடுத்தனர்
இதன் மூலம் 8-ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 10:40 am
ஐரோப்பா லீக்: ஏஎஸ் ரோமா தோல்வி
March 14, 2025, 10:37 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்
March 13, 2025, 12:27 pm
மீண்டும் கால் மூட்டு காயம் – சுவிஸ் ஓபன் போட்டியிலிருந்து லீ ஜீ ஜியா விலகல்
March 13, 2025, 10:16 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அர்செனல்
March 12, 2025, 8:41 am
ஐரோப்பிய சாம்பியன்: லீக் லிவர்பூல் ஏமாற்றம்
March 11, 2025, 9:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
March 11, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்
March 10, 2025, 10:30 am