நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வில்கன் மலேசியா பூப்பந்துப் போட்டியில் 650 போட்டியாளர்கள் பங்கேற்பு

பூச்சோங்:

வில்கோன் மலேசியா பூப்பந்துப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் 650க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர் என்று வில்கன் நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தராஜூ கூறினார்.

விளையாட்டு தளவாடப் பொருட்களை விற்பனை செய்யும் வில்கன் நிறுவனம் இந்த பூப்பந்துப் போட்டியை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

இளம் விளையாட்டாளர்களிடையே பூப்பந்து விளையாட்டின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இந்திய போட்டியாளர்களுக்காக இப்போட்டி நடத்தப்பட்டது.

இவ்வாண்டு பல்லின விளையாட்டாளர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். 

இரண்டு நாட்களுக்கு நடந்த இப்போட்டியில் 650 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் முதல் வெட்ரன் போட்டியாளர்களுக்கு என மொத்தம் 14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

May be an image of 9 people and text

போட்டியாளர்கள் முழு திறனை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் சென்றனர்.

வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் இப்போட்டி நடத்தப்படும் என்று கோவிந்தராஜூ கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset