நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லிபியாவில் நிகழ்ந்த கோரத்தின் மரண எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது

டெர்னா :
லிபியாவில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தின்  மரண எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது

டேனியல்  புயல்காற்று தாக்கிய போது  அணைக்கட்டுகள் உடைந்ததில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். 

அணைக்கட்டுகள் உடைந்ததற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

உடைந்த இரண்டு அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டுமே 1970களில் கட்டப்பட்டவை.

குறிப்பாக உடைந்த இரண்டு அணைக்கட்டுகளில் 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் சீர்செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நேர்ந்தபோது குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல்கள்  கொடுக்கப்பட்டதா என்ற கேள்விகளும் இப்போது முன்வைக்கப்படுகின்றன. 

மரணமடைந்தோரின்  எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது. 

இன்னும் 10,000 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset