செய்திகள் வணிகம்
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மூக்குத்தி பேலஸ் - 5,000 வடிவங்களில் புது ரக மூக்குத்திகள்: டத்தின் சித்தி ஆயிஷா
கோலாலம்பூர்:
ஈப்போவில் புகழ் பெற்ற மூக்குத்தி பேலஸ் தனது இரண்டாவது கிளையை தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திறந்துள்ளது.
இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்கள் கொண்ட மூக்குத்திகள் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு உள்ளது என்று அதன் உரிமையாளர் டத்தின் சித்தி ஆயிஷா கூறினார்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவங்களில் மூக்குத்திகளை விற்க வேண்டும் என்ற நோக்கில் தான் ஈப்போவில் இந்த மூக்குத்தி பேலஸ் நகைக்கடை திறக்கப்பட்டது.
ஈப்போ மக்களிடமிருந்து இந்த மூக்குத்தி பேலஸ்க்கு மகத்தான ஆதரவு கிடைத்தது. ஏன் கோலாலம்பூரில் இருந்து வருபவர்கள் கூட இந்த கடைக்கு வந்து மூக்குத்திகளை வாங்கி செல்கின்றனர்.
இதன் அடிப்படையில் தான் கிள்ளான் பள்ளத்தாக்கு வாடிக்கையாளர் வசதிக்காக இந்த மூக்குத்தி பேலஸ் தற்போது ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா மூக்குத்தி பேலசில் 5000க்கும் மேற்பட்ட வடிவங்களில் மூக்குத்திகள் வாடிக்கையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அதேவேளையில் இந்த மூக்குத்தி பேலஸில் 30 ரிங்கிட்டில் இருந்து வாடிக்கையாளர்கள் மூக்குத்திகளை வாங்கிக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்டே இங்கு மூக்குத்திகள் விற்கப்படுகிறது.
அதேவேளையில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புக் கழிவுகளும் வழங்கப்படுகிறது.
ஈப்போ, கோலாலம்பூரை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மூக்குத்தி பேலஸை திறக்க நாங்கள் திட்டம் கொண்டுள்ளதாக டத்தின் சித்தி ஆயிஷா கூறினார்.
ஈப்போவை போன்று கோலாலம்பூரில் உள்ள வாடிக்கையாளர்களும் எங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மன திருப்தி அடையும் வகையில் மூக்குத்தி வடிவங்கள் ரகம் ரகமாக உள்ளது.
அது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திரளாக இங்கு வர வேண்டும் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக மூக்குத்தி பேலஸ் உரிமையாளர் டத்தோ முஹம்மத் அனுவார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
