நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

80 ஆண்டுகளாக ஓடிய மும்பையின் டபுள் டக்கர் பேருந்துகள் நிறுத்தம்

மும்பை:

சுமார் 80 ஆண்டுகளாக மும்பையில் வலம் வந்த டீசலில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

1937ம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மும்பாய் நகரில் அறிமுகமாகின. 1990களில் இதன் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக இருந்தது. இவை மாநகரின் அடையாளமாகவே இருந்து வந்தன.

அண்மைக் காலமாக மின்சாரத்தில் இயங்கும் டபிள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின. ஆகையால், டீசலில் இயங்கி வந்த இந்த சிவப்பு வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன.

Watch: Last Red Double Decker Bus Leaves from Marol Depot in Mumbai

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவை முற்றிலுமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. கடைசி நாள் நினைவாக மும்பை மாநகர பேருந்து பணியாளர்கள்  சிவப்பு நிற டபுள் டக்கர் பேருந்துகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சிவப்பு நிற அரசுப் பேருந்துகள் மும்பை வீதிகளிலிருந்து அகற்றப்பட்டாலும், அவற்றுக்கு மாற்றாக சிவப்பு-கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட  மின்சாரத்தில் இயங்கும் 25 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset