நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை 

கோலாலம்பூர் :

நாளை மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அமைதி பேரணி திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தப் பேரணிக்காகச் சாலைகளை மூடத் திட்டமிடப்படவில்லை என்று கோலாலம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

சாலையை மூடும் நடவடிக்கையால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜிட் கூறினார். 

கோலாலம்பூர் காவல்துறை குழு போக்குவரத்தை சீராகச் செய்வதில் தயார் நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜமேக் கம்போங் பாரு மசூதியில் இருந்து தலைநகரைச் சுற்றியுள்ள எந்த இடத்திற்கும் பேரணியை நடத்துவதற்கு பேரணி அமைப்பாளர்கள் திட்டமிட்டால், தனது தரப்பு தயாராக இருப்பதாக அல்லாவுதீன் கூறினார்.

பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அணிவகுப்பு நடத்தினால் சாலையை மூடுவதா அல்லது தடுப்பதா என்பதை பேரணியின் போது நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

கோலாலம்பூர் காவல் துறையினர் சட்டத்திற்குப் புறம்பான எந்த விஷயத்தையும் கண்காணித்து மேற்பார்வை செய்வார்கள்.

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்பவர்கள் மீது காவல்துறை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset