நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜி20 நாடுகளின் தில்லி பிரகடனம் என்ன கூறுகிறது

புது டெல்லி:

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஜி20 உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் கடந்த இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால் தில்லி மாநாட்டில் உக்ரைன் பிரச்சனையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஐ.நா. பொதுச் சபை உள்ளிட்டவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மதித்து அனைத்து நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் உறுதியேற்கப்பட்டது.

எனினும் இது வரலாற்று சிறப்பு மிக்கதாத கூற முடியாது என உக்ரைன் கூறியுள்ளது. ரஷியா பெயரை குறிப்பிடாமல் இந்த பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் எந்தவித பலனும் இல்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் இருந்து தானியங்களை கருங்கடல் வழியாக கொண்டு செல்ல ரஷியா ஏற்படுத்தி வரும் தடைக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

கருங்கடல் தானிய வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷியாவின் இந்த தடையால் உலகம் முழுவதும் உணவு பொருள்களின் விலை உயர்ந்தது.

இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக ஐரோப்பாவுக்கு சாலை வழித்தடம் அமைக்கவும் இந்த மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset