நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோலாலம்பூர்:

எதிர்க்கட்சி எம்பிக்கள் வரக்கூடும் என்று கருதப்படும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லக்கூடிய சாலைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வு கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. எனினும் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு ஏற்ப திங்கட்கிழமை நடைபெற இருந்த நாடாளுமன்ற அமர்வும் ரத்தானது. இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க சுகாதார அமைச்சு அடுத்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

எனினும், இத்தகைய காரணங்களை எதிர்க்கட்சிகள் ஏற்பதாக இல்லை. திட்டமிட்டபடி திங்கட்கிழமையன்று (இன்று) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றம் செல்லப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். அரசாங்கம் முன்வைக்கும் சாக்குபோக்குகளை ஏற்க இயலாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

Malaysia will not extend COVID-19 state of emergency, says law minister -  CNA

அந்த அறிவிப்பின்படி நிறைய எம்பிக்கள் இன்று நாடாளுமன்றம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் காலை 9 மணியில் இருந்தே, நாடாளுமன்றம் நோக்கிச் செல்லும் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஊடகவியலாளர்களையும் காண முடிவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset