நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த தவறியதால் 14 கோடி இந்தியர்கள் விடுவிப்பு

புது டெல்லி: 

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை 2021-இல் ஒன்றிய பாஜக அரசு  நடத்த தவறியதால், உணவு உரிமையிலிருந்து 14 கோடி இந்தியர்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,  10 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தவறிய ஒன்றிய பாஜக அரசின் தோல்வியைப் பிரதிபலிக்கிறது.

கடந்த 1951ஆம் ஆண்டுமுதல் முறையே நடத்தப்பட்டு வந்த மக்கள்தொகை கணக்கெடுப்பைக் 2021ம் ஆண்டு நடத்த தவறிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஒரு திறனற்ற மற்றும் தகுதியற்ற அரசாகும். இது ஒரு மிகப்பெரிய வரலாற்று தோல்வி.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 67 சதவீத இந்தியர்கள் நியாய விலையில் உணவுப் பொருள்களைப் பெற தகுதியுடையவர்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது 81 கோடி பேருக்கு மட்டுமே நியாய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset