நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜி20 விருந்தை புறக்கணிக்கும் முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள்

புது டெல்லி: 

ஜி20 மாநாட்டையொட்டி தில்லியில் சனிக்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் இரவு விருந்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களின் முதல்வர்களும், முன்னாள் பிரதமர்களும் பங்கேற்கப் போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இரவு விருந்துக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியின்  அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்  இரவு விருந்தில் பங்கேற்க இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் இரவு விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரவு விருந்தில் பங்கேற்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், ஹெச்.டி.தேவ கௌடா ஆகியோரும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை. "உடல்நிலை காரணமாக தங்களால் பங்கேற்க இயலவில்லை' என இருவரும் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset