நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங்கில் 140 ஆண்டுகளுக்கு பின் அடைமழை - பல பகுதிகளில் வெள்ளம்

ஹாங்காங்:

ஹாங்காங்கில் திடீரென்று பெய்த அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 140 ஆண்டுகளில் ஒரு மணி நேரத்தில் பொழிந்த ஆக அதிக மழை அது என்று கூறப்பட்டது.

ஹாங்காங்கில் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் அளவு, 158 மில்லிமீட்டருக்கும் அதிகம்.

வெள்ளத்தால் தெருக்கள் ஆறுகளாக மாறின. 

வாகனங்களில் இருந்தோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

வெவ்வேறு வட்டாரங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க,
நெருக்கடிக்கால உதவிச் சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஈராண்டுகளுக்குப் பிறகு, கடும் மழை, புயல் குறித்து அதிகாரிகள் உயர்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset