நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

BJP தனது பெயரிலுள்ள பார்ட்டி என்ற ஆங்கில வார்த்தையை முதலில் மாற்றட்டும்; இந்தியா பெயர் மாற்றம் குறித்து பிறகு பேசட்டும்: அகிலேஷ் யாதவ் அதிரடி யோசனை

புதுடெல்லி: 

இந்தியா என்ற பெயர் ஆங்கிலப் பெயர் என கூறும் பாஜக தனது கட்சியின் பெயரில் உள்ள வார்த்தையை முதலில் மாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கான பொது மொழியை, மனிதாபிமானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதினாலும், குறுகிய மனப்பான்மை கொண்ட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மொழியை அடிமைத்தனத்தின் அடையாளமாக மாற்ற விரும்புகின்றன.

அப்படி என்றால், பாஜக தனக்கான சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் பெயரில் இருக்கும் party என்ற வார்த்தையை முதலில் அகற்ற வேண்டும்.

பார்ட்டி (Party) என்பதை இந்திய மரப்புப்படி மாற்ற வேண்டுமானால் ‘தள்’ (dal) என்று மாற்ற வேண்டும்.

எனவே, Bharathiya Janatha Party (BJP) என்பது Bharathiya Janatha Dal (BJD) என மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

BJP தனது பெயரிலுள்ள பார்ட்டி என்ற ஆங்கில வார்த்தையை முதலில் மாற்றட்டும்; இந்தியா பெயர் மாற்றம் குறித்து பிறகு பேசட்டும் என்று அகிலேஷ் யாதவ் அதிரடியாக யோசனை கூறியுள்ளதால் பாஜகவினர் பதில் கூற முடியாமல் திணறி வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset