நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சனாதானம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் கழுத்தை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு: ஹிந்து மத குரு அறிவிப்பு

புது டெல்லி: 

சனாதன தர்மம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் பிகார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யயப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை கருத்து தெரிவிக்கையில் "சனாதன தர்மம் என்பது சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. அது கொரோனா தொற்று, மலேரியாவைப் போலானது. ஒடுக்கக் கூடாது, முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.  

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டனமும் பதிலடியும் கொடுத்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் கழுத்தை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும் என உ.பி. ஹிந்து மத குரு அறிவித்தார்.

இந்நிலையில், பிகார் மாநிலம் முசாபர்பூர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதீர் குமார் ஓஜா மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் , உதயநிதியின் கருத்துகள் ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மனு வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset