நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜோ பைடனின் மனைவிக்கு கோவிட் 19 தொற்று

வாஷிங்டன்: 

அமெரிக்கா நாட்டின் முதல் பெண்மணியும் அதிபர் ஜோ பைடனின் மனைவியுமான ஜில் பைடனுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அதிபர் ஜோ பைடனுக்கு தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனையில் தெரிய வந்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

72 வயதாகும் ஜில் பைடனுக்கு தொற்று குறித்து சில அறிகுறிகள் இருந்ததால் அவரிடம் கோவிட் 19 சோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பீடித்திருப்பது தெரிய வந்தது. 

இந்நிலையில், ஜில் பைடன்  டெலவார் பகுதியில் உள்ள தமது வீட்டில் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset