நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் விளாடிமீர் புதீனைச் சந்திக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 

வாஷிங்டன்: 

ரஷ்யா நாட்டின் அதிபரான விளாடிமீர் புதினை வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பு ரஷ்யாவில் இம்மாதம் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரில் ஆயுதங்களை வழங்குவதற்கான கலந்துரையாடலை நடத்தவே இந்த சந்திப்பு நடத்தப்படலாம் என்று அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஆங்கில செய்தி ஊடகமான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

பியோங்யாங்கிலிருந்து ரயில் பயணம் மூலமாக விளாடிவோஸ்தோக் நகருக்கு கிம் ஜோங் உன் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது. 

இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு குறித்து அமெரிக்கா வெள்ளை மாளிகை உடனடியாக பதில் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset