நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது

மும்பை:

வங்கி கடன் மோசடி வழக்கில் கைதான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) நிறுவனம் கனரா வங்கியிடம் ரூ.848.86 கோடி கடன் பெற்று, ரூ.538.62 கோடி நிலுவை வைத்துள்ளது.

மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை, அதன் துணை நிறுவனங்களுக்கு வேறு காரணங்களுக்காக திருப்பிவிட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து வங்கித் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நரேஷ் கோயல், அவருடைய மனைவி அனிதா, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

சிபிஐஇன் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், கோயல் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அவரிடம் வெள்ளிக்கிழமை நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசரணையின் முடிவில் அவரை கைது செய்த அமலாக்கத் துறை, மும்பை பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

அப்போது, நரேஷ் கோயலை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset