நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் 70.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் துறை அறிவித்தது. 

தேர்தல் முடிவுகள்

தர்மன் சண்முகரத்னம் - 70.40% (1,746,427 வாக்குகள்)

இங் கொக் சொங் - 15.72%(390,041 வாக்குகள்)

டான் கின் லியான் - 13.88% (344,292 வாக்குகள்)

இங் கொக் சொங், டான் கின் லியான் அதிபர் வேட்பாளர்களான இருவரும் தர்மனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் இருந்த தர்மன், தமக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset