
செய்திகள் தொழில்நுட்பம்
தொலைப்பேசி எண் இல்லாமல் வீடியோ & ஆடியோ அழைப்புகள் செய்யலாம் - எலான் மஸ்க் அறிவிப்பு
கலிப்போர்னியா :
எக்ஸ் தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று
எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதன்படி பயனர்கள் தொலைப்பேசி எண்கள் இல்லாமல் தங்களின் பயனர் பெயரைக் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
முன்னதாக, எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே - புதிய வீடியோ அழைப்பு ஆப்ஷன் பற்றிய படங்களை[ பகிர்ந்து இருக்கிறார்.
மேலும், எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
எனினும், இந்த வசதிகளை பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் "ஸ்பேசஸ்" எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.
எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
August 30, 2023, 11:43 pm
நிலவின் மேற்பரப்பில் SULPHUR சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிப்பு
August 26, 2023, 3:54 pm
நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
August 25, 2023, 3:31 pm
சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
August 23, 2023, 7:22 pm
சந்திரயான்-3 இன்னும் சிறிது நேரத்தில் தரை இறங்கும்: இஸ்ரோ
August 23, 2023, 11:10 am
X பயன்பாடு தோல்வியடையக்கூடும்: எலான் மாஸ்க்
August 19, 2023, 1:20 pm