நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதித்யா எல்-1 விண்கலத் திட்ட இயக்குனராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றுகிறார்

தென்காசி : 

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், அந்த வரிசையில் இந்தியா 4-வது இடத்தைப் பெறும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலம் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகின்றார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். 

தனது ஆரம்ப கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். பின்னர் மேல்நிலை கல்வியைச் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். 

நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார்.

இத்தகைய விண்கலம் தயாரிப்பில் திட்ட இயக்குனராக முதன்மையான இடத்தில் இருக்கும் நிகர் சாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது. 

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset