நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தொடரும் மாணவர்களின் தற்கொலை: பயிற்சி தேர்வுகளை நிறுத்துமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவு

கோட்டா: 

மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து நீட், ஜேஇஇ பயிற்சித் தேர்வுகளை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் மாநில கோட்டா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீட், ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்கு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு கோட்டா பயிற்சி மையங்கள் பிரபலம்.

நாடு முழுவதிலுமிருந்து ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த மாவட்டத்திலுள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த மாவட்ட பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

தற்கொலைகளைத் தடுக்க மின் விசிறிகளில் ஸ்பிரிங் தொழில்நுட்ப வசதியை மாவட்ட நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர்.

எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதிய மாணவர் அடுக்கு மாடியில் இருந்து  குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset