நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லஞ்ச வழக்கில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரிகள்: சிபிஐ விசாரணை

புது டெல்லி: 

தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ரூ.5 கோடி லஞ்சம்  பெற்ற புகாரில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் பவன் கத்ரி, அத் துறையின் எழுத்தர் நிதீஷ் கோஹர்  மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அவர்கள் மீதான பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறையே விசாரிக்கிறது.  

சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கண்காணித்த அமலாக்கத் துறை, சிபிஐக்கு புகார் அளித்து ஊழல் வழக்கில் சேர்த்துள்ளது.

தில்லியில் புதிய மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்க கொண்டு வரப்பட்ட கலால் கொள்கைகள், தனியார் மதுபான தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அதில் ஊழல் நடைபெற்றதாகவும் துணைநிலை ஆளுநர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இந்த புதிய கொள்கைகளை முதல்வர் கேஜரிவால் அரசு திரும்பப் பெற்றது.

இந்த ஊழல் வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ.5 கோடி வரையில் லஞ்சம் வழங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரியின் மீதே லஞ்ச புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset