நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

நிலவின் மேற்பரப்பில் SULPHUR சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிப்பு

பெங்களூரு: 

நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(SULPHUR) இருப்பதை சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ அறிவித்தது.
நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் லேசரால் தூண்டப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியின் (எல்ஐபிஎஸ்) ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தென்துருவத்தின் அருகேயுள்ள பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, க்ரோமியம், டைடேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் ஆக்ஸிஜன் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset