நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அருணாசல பிரதேசத்தை இணைத்து வரைபடம் வெளியிட்ட சீனா: இந்தியா கண்டனம்

புது டெல்லி:

இந்தியாவின் அருணாசல் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாசல், அக்சாய் சின் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் பகுதிகளாக சீனா குறிப்பிட்டுள்ளது. தைவான், தென் சீனக் கடல் உள்ளிட்டவற்றையும் தங்கள் உரிமைக்கு உள்பட்ட பகுதியாக சீனா தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது.

சீன அரசின் இது போன்ற நடவடிக்கைகள், எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதை மேலும் சிக்கலாக்கும். இது தொடர்பாக சீனாவுடன் தூதரக ரீதியில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.

எந்தவித அடிப்படையும் இல்லாமல் சீனா தயாரித்துள்ள புதிய வரைபடத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றார்.
  னாவின் புதிய வரைபடம் குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் சமூக வலைதளத்தில், அருணாசல், அக்சாய் சின் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் என்றும் ஒருங்கிணைந்தவை. அவற்றை இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset