நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி: இந்திய அரசு அறிவிப்பு

புது டெல்லி:

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாசுமதி அல்லாத அனைத்து அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி அண்மையில் விதிக்கப்பட்டது.

உள்நாட்டு சந்தையில் புழுங்கல் அரிசியின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் போதிய அளவு இருப்பை உறுதிசெய்யவும் அதன் ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 16ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset